சீனா கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அதிகாரபூர்வமாக சீன மக்கள் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் இந்தியாவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இதுவாகும். ஐந்து நேர வலயங்களுக்குச் சமமாக சீனா விரிவடைந்துள்ளது. 14 நாடுகளுடன் நில எல்லைகளைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 96 இலட்சம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுடன் மொத்த நிலப்பரப்பளவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடு இதுவாகும். இந்நாடானது 33 மாகாண நிலைப் பிரிவுகள், 22 மாகாணங்கள், ஐந்து சுயாட்சிப் பகுதிகள், நான்கு மாநகராட்சிகள் மற்றும் இரண்டு பகுதியளவு சுயாட்சியுடைய சிறப்பு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெய்சிங் இந்நாட்டின் தலைநகரம் ஆகும். மேலும்...
சர்வோதயக் கல்வி என்பது அறிவும் உழைப்பும் தனித்தனியானவை அல்ல என்பதைக் கூறும் ஒரு கொள்கையாகும். இந்தக் கல்வியியல் கொள்கையின் அடிப்படையில் அதே பெயரில் ஒரு கல்விப் பாடத்திட்டத்தை மகாத்மா காந்தி ஊக்குவித்தார். இந்தச் சொற்றொடர் 'அனைவருக்கும் அடிப்படைக் கல்வி' என மொழிபெயர்க்கப்படுகிறது. இது ஆங்கிலக் கல்வி முறை, காலனித்துவத்துடன் காந்திக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. காந்தியக் கல்வி முறையானது குழந்தைகள் தங்கள் கைவண்ணத்தையும் கற்பனைத் திறனையும் காட்டும் தொழில் பட்டறைகளை அறிமுகம் செய்யும் கல்வியாக இருந்தது. மேலும்...
துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
1886 – ஹேமார்க்கெட் படுகொலை: சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவல்துறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர்.
1949 – அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதிகோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,73,819 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.